×

குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்


வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயற்சி செய்ததாக அமெரிக்கா கடந்த ஆண்டு குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 30ம் தேதி அமெரிக்காவில் இருந்து வௌியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், “குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சி சம்பவத்தில் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் யாதவுக்கு தொடர்பு உள்ளது.

மேலும் பன்னுன் மீதான தாக்குதலுக்கு ரா பிரிவின் மற்றொரு தலைவர் சமந்த் கோயல் அனுமதி அளித்திருந்தார்” என்று செய்திகள் வௌியாகின. இந்நிலையில் அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இதுதொடர்பான இந்திய விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

The post குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல் appeared first on Dinakaran.

Tags : Gurpadwant Singh Pannu ,India ,US ,Washington ,United States ,Nikhil Gupta ,Gurbatwant Singh Bannun ,Canada ,New York ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...